1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 11 ஜனவரி 2022 (01:21 IST)

துல்கர் சல்மானின் சல்யூட் பட ரிலீஸ் தள்ளிவைப்பு !

துல்கர் சல்மான் நடித்துள்ள சல்யூட் படத்தின்  ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து நடிக்கும் சல்யூட் என்ற திரைப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்த திரைப்படத்தை ரோஷன் ஆண்ட்ரோஸ் இயக்கியிருக்கிறார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் துல்கர் போலீஸாக நடித்துள்ளார். இதோ இந்த படத்தின் டீசருக்கு கிடைத்த கவனத்தை அடுத்துஇப்படம் இம்மாதம் ரிலீஸாக இருந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கொரொனா பரவல் காரணமாக ஆர்.ஆர்.ஆர், வலிமை உள்ளிட்ட படங்கள் ரீலீஸ் தேதியைத் தள்ளி வைத்துள்ள நிலையில் தற்போது சல்யூட் படமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.