சாமி 2 படத்தில் த்ரிஷா
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் சாமி 2 படத்தில் த்ரிஷா நடிக்கிறார். இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடித்த சாமி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகத்தை ஹரி இயக்குகிறார். இருமுகன் படத்தை தயாரித்த ஷிபு தமீன்ஸ் சாமி 2 வை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில், முதல்பாகத்தில் நடித்த த்ரிஷாவே நடிப்பாரா இல்லை வேறு நடிகை ஒப்பந்தம் செய்யப்படுவாரா என்ற கேள்வி இருந்தது. தற்போது த்ரிஷாவே சாமி 2 படத்தில் நடிப்பதாக கூறியுள்ளார்.
விக்ரம் நடித்துவரும், துருவநட்சத்திரம், விஜய் சந்தர் படம் இரண்டும் முடிந்த பின் சாமி 2 தொடங்கப்படும்.