புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 1 அக்டோபர் 2020 (19:50 IST)

சவால் விட்ட நடிகருக்கு நன்றி கூறிய த்ரிஷா!

நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபத்தில் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று தனது வீட்டில் செடியை நட்டார் என்பதும் தனது மகனுடன் அவர் செடி நட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது என்பதும் தெரிந்தது 
 
அது மட்டுமின்றி அவர் இந்த கிரீன் இந்தியா சேலஞ்சை நடிகர்கள் மோகன்லால், சூர்யா மற்றும் நடிகைகள் ரக்ஷிதா ஷெட்டி, த்ரிஷா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர்களுக்கு ஃபார்வேர்ட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நடிகை த்ரிஷா, பிரகாஷ்ராஜ் சவாலை ஏற்று அவருக்கு நன்றி தெரிவித்து உள்ளார். அந்த சேலஞ்சை ஏற்றுக்கொள்ளும் வகையில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விரைவில் த்ரிஷா செடி நடும் புகைப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
நடிகர் பிரகாஷ்ராஜ் மகளாக ’அபியும் நானும்’ என்ற படத்தில் த்ரிஷா நடித்துள்ளார் என்பதும் த்ரிஷா நடித்த பல படங்களில் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது