1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 30 ஜூன் 2016 (17:54 IST)

த்ரிஷாவை குறி வைக்கும் தியாகராஜன்

த்ரிஷாவை குறி வைக்கும் தியாகராஜன்

இந்தியில் வெளியான ஸ்பெஷல் 26, குயின் படங்களின் தென்னிந்திய மொழி உரிமையை தியாகராஜன் முன்பே வாங்கினார்.


 


இதில் ஸ்பெஷல் 26 ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கிறார். குயின் ரீமேக்கில் யார் நடிப்பது என்பது இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.
 
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் குயின் படத்தை ரீமேக் செய்ய தியாகராஜன் திட்டமிட்டுள்ளார். இந்த நான்கு மொழி ரசிகர்களுக்கும் பரிட்சயமான நடிகைதான் தியாகராஜனின் டார்கெட். 
 
பலரை யோசித்து கடைசியாக த்ரிஷாவை குறி வைத்துள்ளார். நடிகை ரேவதி இந்த ரீமேக்கை இயக்குவார் என கூறப்படுகிறது.