1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 4 ஜூலை 2018 (11:38 IST)

எக்ஸ் லவ்வரை மிரட்டி பணம், நகை பறித்த வாலிபர் கைது

சென்னையில் திருமணமான தனது முன்னாள் காதலியை மிரட்டி பணம் மற்றும் நகையை பறித்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில், அந்த பெண்ணின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
 
பின் அந்த பெண்ணின் பெற்றோர், அவருக்கு சென்னையை நேர்ந்த நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அந்த பெண் தனது கணவருடன் சென்னையில் வசித்து வந்துள்ளார்.
 
இதனையறிந்த அந்த பெண்ணின் முன்னாள் காதலன் அந்த பெண்ணை மிரட்டி அவ்வப்போது நகை மற்றும் பணத்தை பறித்து வந்துள்ளான். மேலும் தான் கேட்கும் தொகையை தர மறுத்தால் நாம் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை உன் கணவனிடம் காட்டிவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான் அந்த இளைஞன். இதனாலேயே பயந்துபோன அந்த பெண் இதுவரை 35 ஆயிரம் ரூபாய் பணமும், 11 சவரன் நகையும் கொடுத்துள்ளார்.
நாளுக்கு நாள் மதன்குமாரின் டார்ச்சர் அதிகமானதால் அந்த பெண், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் மதன் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.