1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2024 (09:02 IST)

சிரஞ்சீவி படத்துக்காக களரி சண்டை கற்கும் திரிஷா!

விஜய் நடித்த லியோ, அஜித் நடித்து வரும் விடாமுயற்சி, கமலஹாசன் நடித்து வரும் தக்லைப் ஆகிய படங்களில் நடித்து வரும் நடிகை த்ரிஷா, அடுத்ததாக தெலுங்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி உடன் நடிக்க இருக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்துக்கு விஸ்வாம்பரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு புராண கால படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. கடைசியாக சிரஞ்சீவியுடன் 18 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டாலின் என்ற படத்தில் திரிஷா நடித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தில் திரிஷாவுக்கு களரிச்சண்டை காட்சிகள் எல்லாம் உள்ளதால் அவர் இப்போது களரிச்சண்டை கற்று வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்துக்காக அவர் 50 நாட்கள் கால்ஷீட் மொத்தமாக கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.