ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2024 (11:42 IST)

விஜய், அஜித், கமல்ஹாசனை அடுத்து சிரஞ்சீவி.. த்ரிஷாவின் அடுத்த பட அறிவிப்பு..!

விஜய் நடித்த லியோ, அஜித் நடித்து வரும் விடாமுயற்சி, கமலஹாசன் நடித்து வரும் தக்லைப் ஆகிய படங்களில் நடித்து வரும் நடிகை த்ரிஷா, அடுத்ததாக தெலுங்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி உடன் நடிக்க இருக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் 18 ஆண்டுகள் கழித்து சிரஞ்சீவி அவர்களுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளேன் என்றும் இந்த வாய்ப்பை எனக்கு அளித்த சிரஞ்சீவி அவர்களுக்கு தனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில்  சிரஞ்சீவி த்ரிஷா மற்றும் பலர் நடிக்க உள்ளனர் என்பதும்  நட்சத்திர தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இன்று இந்த படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் நடந்த நிலையில் சிரஞ்சீவி த்ரிஷா உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

பிரபல தமிழ் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ஸ்டாலின் என்ற திரைப்படத்தில் சிரஞ்சீவி மற்றும் திரிஷா இணைந்து நடித்தனர். இந்த படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் சிரஞ்சீவி, த்ரிஷா இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran