1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2023 (18:57 IST)

அவசரப்பட்டுட்டியே குமாரு... Blue Tick பறிக்கப்பட்டது குறித்து திரிஷா ஜெயம் ரவி!

நடிகை திரிஷா சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து இப்போதும் பரபரப்பான கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 
 
கடந்த சில ஆண்டுகளாக பெரியளவில் வாய்ப்பில்லாமல் இருந்தாலும் இப்போது பொன்னியின்செல்வன் 1 வெற்றியால் மீண்டும் அவரைத் தேடி வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. தற்போது அதன் இரண்டாம் பக்கத்தில் நடித்து முடித்துள்ளார். அதன்   ப்ரோமோஷனில் பிஸியாக இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்  ட்விட்டர் நிறுவனத்தினைக் கைப்பற்றிய எலான் மஸ்க், அதில் பல புதிய விதிமுறைகளைப் புகுத்தியுள்ளது. அதன்படி ப்ளு டிக்கிற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதும் ஒன்றாகும்.  
 
இதையடுத்து திரிஷா மற்றும் ஜெயம் ரவி ஆகியோரின் டிவிட்டருக்கான ப்ளு டிக் திடீரென நீக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அந்த கட்ணத்தைக் கட்டவில்லையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என ரசிகர்கள் குழப்பமடைந்தனர். 
 
தற்போது ப்ரோமோஷன் பேட்டி ஒன்றில் அது குறித்து விளக்கம் அளித்துள்ள த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி, படத்தின் புரமோஷனுக்காக தான் நங்கள் பெயரை மாற்றினோம், ஆனால் ஆசைப்பட்டு பெயரை மாற்றி ப்ளூடிக்கை இழந்துவிட்டோம் என விளக்கம் தெரிவித்துள்ளனர்.