வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (14:48 IST)

இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ள திரைப்படங்கள்!

சித்தா திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 30  கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. நல்ல படம் என்ற வாய்வழி விமர்சனங்கள் வழியாகவே இந்த படத்துக்கு விளம்பரம் கிடைத்து மெல்ல மெல்ல பிக்கப் ஆகியுள்ளது. இந்நிலையில் இப்போது இந்தபடம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நாளை முதல் வெளியாக உள்ளது.

மம்மூட்டியின் சமீபத்தைய படமான கன்னூர் ஸ்குவாட் படம் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற இந்த படம் வசூலில் கலக்கி வருகிறது. தீரன் போல போலீஸ் துறை தேடிச் செல்லும் ஒரு கடினமான வழக்கைப் பற்றிய படமாக உருவாகியுள்ளது. 100 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்குகள் மூலமாக இந்த படம் வசூலித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியாக உள்ளது.

இவை தவிர நடிகர் வெற்றி நடிப்பில் கடந்த ஆண்டே ரிலீஸ் ஆன ஜோதி திரைப்படம் நாளை முதல் ஆஹா தமிழில் ரிலீஸ் ஆகிறது.  கடந்த மாதம் ரிலீஸான கன்னட சூப்பர் ஸ்டாரின் கோஸ்ட் திரைப்படம் ஜி 5 தளத்தில் நாளை முதல் ரிலீஸ் ஆகிறது. கவனம் பெற்ற தீப்பொறி பென்னி என்ற திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது.