வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2023 (18:28 IST)

நம்ம மமூட்டியா இது? செம கெட்டப்பா இருக்கே! – வைரலாகும் பிரமயுகம் பட போஸ்டர்!

Piramayugam
மலையாள நடிகர் மமூட்டியின் பிறந்தநாளான இன்று அவர் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது.



மலையாளத்தின் மெகா ஸ்டாராக இருப்பவர் நடிகர் மமூட்டி. ரசிகர்களால் மமூக்கா என செல்லமாக அழைக்கப்படும் மமூட்டிக்கு வயது 72. ஆனாலும் இன்றும் இளமையாக தோன்றும் மமூக்கா தொடர்ந்து பல ஹிட் படங்களை மலையாளத்தில் கொடுத்து வருகிறார். தமிழில் ஆனந்தம், தளபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மமூக்காவிற்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் மமூட்டி நடித்த “நண்பகல் நேரத்து மயக்கம்” படமும் பழனியில் நடப்பது போலவே எடுக்கப்பட்டிருந்தது. இன்று மமூட்டியின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், அதை சிறப்பிக்கும் விதமாக அவரது அடுத்தடுத்த படங்களுக்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லர்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மமூட்டி நடிக்கும் பிரமயுகம் – The age of madness படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் மூலம் இது பேன் சவுத் இந்தியன் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமன்றி மமூட்டியின் அடுத்த படமான கன்னூர் ஸ்குவாட் படத்தின் ட்ரெய்லரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ளார். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். மமூட்டியின் பிறந்தநாளில் அடுத்தடுத்து அவரது பட அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

Edit by Prasanth.K