வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (22:19 IST)

கேனத்தனமான டாஸ்க், போரடிக்கும் காட்சிகள்: விரைவில் மூடுவிழா காணும் பிக்பாஸ்

கடந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்று கூறினால் அது மிகையில்லை.



 
 
ஓவியாவும் ஓவியாவுக்கு இடைஞ்சல் கொடுத்த ஜூலியும் வீட்டை விட்டு வெளியேறியவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட படுத்துவிட்டது. இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் துணி துவைக்கும் கேனத்தனமான டாஸ்க் கொடுக்கப்பட்டதாக நெட்டிசன்கள் புலம்புகின்றனர். 
 
ஒரு நட்சத்திர கூட்டத்தை பிக்பாஸ் வீட்டுக்கு அழைத்து வந்து துணி வைக்க வைக்கும் டாஸ்க் கொடுப்பதில் இருந்து பிக்பாஸூக்கு மூளை பிசகிவிட்டது என்று தெரிந்துள்ளதாகவும் இப்படியே போனால் இந்த நிகழ்ச்சி வெகுவிரைவில் மூடுவிழா காண நேரிடும் என்றும் டுவிட்டர் பயனாளி ஒருவர் பதிவு செய்துள்ளார். லக்சரி பட்ஜெட், டாஸ்க், வையாபுரி புலம்பல் என இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி மிக மோசமாக இருந்தது. முதல்முறையாக பலர் சேனலை மாற்றியிருப்பார்கள் என்பது உண்மை.