1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam

100 வருட தமிழ் திரையுலகில் புதிய சாதனை! 95% திரையரங்குகளில் 'விவேகம்' ரிலீஸ்

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் 24ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. சென்னையின் ஒருசில திரையரங்குகளில் முன்பதிவு ஆரம்பித்த ஒருசில வினாடிகளில் புக்கிங் முடிந்துவிட்டது.

 
இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் நடத்திய அவசர கூட்டம் ஒன்றில் தமிழகத்தின் 95% திரையரங்குகளில் 'விவேகம்' படத்தை ரிலீஸ் செய்து முதல் நான்கு நாட்கள் அதாவது வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் திரையிட முடிவு செய்துள்ளார்களாம்
 
இந்த தகவல் உண்மை என்றால் 100 வருட தமிழ் திரையுலகில் இதுதான் சாதனை. இந்த சாதனை 'பாகுபலி 2' படம் கூட செய்யாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.