வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 13 மார்ச் 2021 (11:23 IST)

டிக் டாக் இலக்கியா நடித்துள்ள நீ சுடத்தான் வந்தியா படத்தின் டிரைலர் ரிலீஸ்!

டிக்டாக்கில் கவர்ச்சியான நடனங்கள் மூலம் கவனம் ஈர்த்த இலக்கியா நடிக்கும் நீ சுடதான் வந்தியா படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகியுள்ளது.

டிக் டாக் பிரபலம் இலக்கியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெறும் கவர்ச்சிப் பாடல்களில் நடித்துப் பிரபலமானார். இதனால் அவருக்குப் பல லட்சக் கணக்காக ஃபாலோயர்கள் உருவாகினர். இந்த நிலையில், டிக் டாக் ஆப்பிற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது. இந்நிலையில் டிக் டாக்கிற்குப் போனாலும் அடுத்து சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளர் இலக்கியா.

அந்த படத்துக்கு நீ சுடதான் வந்தியா என்ற வித்தியாசமான தலைப்பை படக்குழுவினர் வைத்துள்ளனர். இந்நிலையில் இப்போது இணையத்தில் அந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட பி கிரேட் படம் போல உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் ஆபாசக் களஞ்சியமாக உள்ளதாக கமெண்ட்கள் எழுந்துள்ளன.