திங்கள், 4 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (15:22 IST)

திரையரங்குகளில் டிக்கெட் கட்டணங்கள் குறைக்க வேண்டும்- தயாரிப்பாளர் சங்கம்

சிறிய பட்ஜெட் படங்களுக்கு டிக்கெட் விலையை குறைக்க வேண்டுமென  தமிழ் திரைப்பட நட்பபு தயாரிப்பாளர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
 
அதில், சிறு பட்ஜெ பட்ஜெட் படங்களுக்கு 80  ரூபாய் எனவும் ,  நடுத்தர மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு  ரூ.120- ரூ..150 என கட்டணத்தை மாற்ற வேண்டும்.
 
சென்னை,மதுரையில் ரூ.100 மட்டுமே வசூலிக்க வேண்டும். திருச்சி, கோவை, சேலம் தவிர மற்ற நகரங்களில் அதிகபட்சம் ரூ.80 கட்டணம்  நிர்ணயிக்கலாம் எனவும், வரும் 23 ஆம் தேதி வெளியாகும் படங்களுக்கு டிக்கெட் விலையை குறைக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
 
மேலும்,தமிழ் திரைப்பட நட்பபு தயாரிப்பாளர்கள் சங்கம்,  மக்கள் சிறிய பட்ஜெட் படங்களை தியேட்டரில் வந்து பார்ப்பதை எளிதாக்கும் வகையில் கோரிக்கிய விடுத்துள்ளது.