1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 3 ஜனவரி 2023 (17:57 IST)

துணிவு படத்தில் நடித்த நடிகருக்கு மீண்டும் வாய்ப்புக் கொடுத்த அஜித்!

துணிவு படத்தில் அஜித்தோடு பிக்பாஸ் புகழ் அமீர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

அஜித்தின் 61 ஆவது படமாக உருவாகியுள்ள துணிவு திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்துக்குப் பிறகு அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி ‘அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் அமீர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், படத்தின் பாடல்களுக்கு அவரே நடனம் அமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அமீருக்கு இந்த படத்தில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது அஜித்தான் எனவும் சொல்லப்படுகிறது.