திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (17:39 IST)

’தளபதி 66’ படத்தில் இணைந்த மேலும் 3 பிரபலங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

thalapathi
தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்களை பார்த்து வருகிறோம் 
 
ஏற்கனவே விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தந்தையாக சரத்குமார் நடிகை இருக்கும் நிலையில் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா ஆகியோர் இந்த படத்தில் இணைந்தனர் என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி ஸ்ரீகாந்த், ஷாம் மற்றும் சங்கீதா ஆகிய மூவரும் இணைந்து உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.மேலும் சிலர் இந்த படத்தில் இணைய இருப்பதாகவும் அதில் சம்யுக்தா, யோகிபாபு ஆகியோர் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
மொத்தத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டம் இந்த படத்தில் நடிக்க இருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது