பப்ளிசிட்டிக்காக வழக்கு: தயாரிப்பாளரின் முகத்திரையை கிழித்த 'தொரட்டி' நாயகி!

Last Modified வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (19:03 IST)
நடிகர் ஷமன் மித்ரு தயாரித்து ஹீரோவாக நடித்த படம் 'தொரட்டி'. இந்த படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் ஏற்கனவே இந்த படம் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டு நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது
இந்த நிலையில் ஷமன் மித்ரு சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தனது 'தொரட்டி' படத்தின் நாயகி சத்யகலாவை அவரது தந்தை கடத்திவிட்டதாகவும், அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது

இந்த நிலையில் இன்று கோவையில் நடிகை சத்யகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் தான் யாராலும் கடத்தப்படவில்லை என்றும் 'தொரட்டி' தயாரிப்பாளர் படத்தின் பப்ளிசிட்டிக்காக இப்படி ஒரு வழக்கை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் படப்பிடிப்பின் இடையே அவருக்கும் தனக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் தான் 'தொரட்டி' படத்தின் புரமோஷனில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

'தொரட்டி' திரைப்படம் ஏற்கனவே பத்திரிகையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தும் இப்படி ஒரு மலிவான விளம்பரம் தேவையா? என்று பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :