திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2019 (09:22 IST)

தெருக்கூத்து டாஸ்க்கால் களைகட்டும் பிக்பாஸ் வீடு!

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இதுவரை மொக்கையான டாஸ்க்குகளே கொடுக்கப்பட்டு இருப்பதாக பார்வையாளர்கள் விமர்சனம் செய்த நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு உருப்படியான டாஸ்க்குகளை பிக்பாஸ் கொடுத்துள்ளார் 
 
 
நேற்று பொம்மலாட்டம் டாஸ்க்கும், இன்று தெருக்கூத்து டாஸ்க்கும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய பொம்மலாட்டம் டாஸ்க்கில் அனைத்து போட்டியாளர்களும் அசத்திய நிலையில், இன்று ஒரு படி மேலே போய் தெருக்கூத்து கலைஞர்களாகவே ஒவ்வொரு போட்டியாளரும் மாறி, சிறப்பாக செய்து வருகின்றனர் 
 
 
குறிப்பாக சேரன் அசத்தலாக தெருக்கூத்து டான்ஸ் ஆடி அனைவரையும் கவர்ந்தார். வனிதா எமதர்மனாகவும், லாஸ்லியா சித்திரகுப்தன் ஆகவும் சிறப்பாக நடித்திருந்தனர். அதேபோல் தர்ஷன், ஷெரின், முகின் உள்பட அனைத்து போட்டியாளர்களும் சிறப்பாக தெருக்கூத்து கலையை நடித்துக் காட்டி பாராட்டுகளை பெற்று வருகின்றனர் 
 
 
மொத்தத்தில் இந்த வாரம் பொம்மலாட்டம், தெருக்கூத்து உள்பட கிராமத்து கலைகளை தமிழகம் முழுவதும் பரப்பும் நோக்கத்தோடு பிக்பாஸ் போட்டியாளர்கள் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது