பிக்பாஸ் வீட்டிற்கு ஆரவ் வந்தது இதற்குத்தானா?
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக பிக்பாஸ் 1 போட்டியாளர்கள் சிலர் வந்திருந்த நிலையில் பிக்பாஸ் 1 டைட்டில் வின்னரான ஆரவ்வும் சிறப்பு விருந்தினராக சமீபத்தில் வந்திருந்தார். ஆரவ்வை அடுத்து ஓவியாவும் வர வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்று ஆரவ் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளீயேறினார்.
முன்னதாக ஆரவ் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் பிக்பாஸ் வீட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 'ராஜபீமா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை பிக்பாஸ் வீட்டில் வெளியிட வேண்டும் என்பதற்காகவே தான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததாக ஆரவ் தெரிவித்தார். 'ராஜபீமா' ஃபர்ஸ்ட்லுக் வெளியானதும் பிக்பாஸ் 2 மற்றும் பிக்பாஸ் 1 போட்டியாளர்கள் ஆரவ்வுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் 'ராஜபீமா' கேக் வெட்டப்பட்டது. முதல் கேக் துண்டை ஆரவ், யாஷிகாவிற்கு ஊட்டினார். அதன்பின்னர் ஆரவ்வின் நேரம் முடிந்துவிட்டதாக பிக்பாஸ் அறிவிக்க, ஆரவ் அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்
ஆரவ் நாயகனாக அறிமுகமாகும் 'ராஜபீமா' திரைப்படத்தை அறிமுக இயக்குனர் நரேஷ் சம்பத் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் யானை ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளது.;