1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2017 (06:14 IST)

47 வயதில் சிக்ஸ்பேக் வைக்க ஆசைப்படும் அரவிந்தசமி

மணிரத்னம் இயக்கிய 'தளபதி' படத்தில் அறிமுகமான நடிகர் அரவிந்தசாமி சில ஆண்டுகள் கொடிகட்டி பறந்தார். பின்னர் பிசினஸ் பக்கம் கவனம் செலுத்திய அவர் மீண்டும் 'தனி ஒருவன்' மூலம் ரீ எண்ட்ரி ஆகி தற்போது கோலிவுட்டில் மீண்டும் பிசியாகிவிட்டார்.



 
 
தற்போது அவர் நடித்த சதுரங்க வேட்டை 2' திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் இயக்குனர் செல்வா இயக்கத்தில் 'வணங்காமுடி' என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
 
இந்த படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இவர் இந்த படத்தின் கேரக்டருக்காக சிக்ஸ்பேக் வைக்க முடிவு செய்துள்ளாராம். 47 வயதில் சிக்ஸ்பேக் கொண்டு வருவது கடினம் என்றாலும் விடாமுயற்சியால் விரைவில் சிக்ஸ்பேக் கொண்டு வருவேன் என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.