1 மதிப்பெண் கொடுத்து வனிதாவை கடுப்பேத்திய ரம்யா கிருஷ்ணன்!

Papiksha Joseph| Last Updated: செவ்வாய், 27 ஜூலை 2021 (15:57 IST)

சர்ச்சைகளுக்கு குறைவில்லாமல் நடந்துக்கொள்ளும் வனிதா அதன் மூலம் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியை சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொண்ட வனிதா அதன் பின்னர் திருமண சர்ச்சையில் சிக்கினார்.
அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஜோடியாக நடனமாடிக்கொண்டிருந்த வனிதா ரம்யா கிருஷ்ணன் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். அந்த நிகழ்ச்சி அண்மையில் தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அப்போது ரம்யா கிருஷ்ணன் 1.5 மதிப்பெண் கொடுத்தார். இதனால் கடுப்பான வனிதா அதில் இருந்து வெளியேறினார்.


இதில் மேலும் படிக்கவும் :