வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By

ராஜு முருகன் அடுத்த படம் இதுதான்; அதிகாரப்பூர்வ தகவல்

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ராஜு முருகன் கதை எழுத, சரவணன் ராஜேந்திரன் இயக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில்,  ராஜு முருகனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சரவணன் ராஜேந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு `மெஹந்தி சர்க்கஸ்' என பெயர் வைத்துள்ளனர். `குக்கு', `ஜோக்கர்' படத்தை இயக்கிய ராஜு முருகன் இந்த படத்திற்கு கதை,  வசனம் எழுதுகிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ் இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மாநகரம் பட பிரபலம்  செல்வகுமார்.எஸ்.கே. ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தில் நாயகனுக்கும், சர்க்கஸ் செய்பவருக்கும் இடையேயான காதலை மையப்படுத்தி  படம் உருவாகுவதாகவும் கூறப்படுகிறது.
 
இப்படத்தில் யானைக்கும் ஒரு முக்கிய பங்கு உள்ளதாக கூறப்படுகிறது.