1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : புதன், 28 ஜூன் 2023 (17:44 IST)

அஜித்திற்கு மிகவும் பிடித்த பாடல் இது தான்... ஷாலினி பகிர்ந்த வீடியோ!

அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
 
தொடர்ந்து நடித்து வரும் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். தற்ப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார். இதனிடையே பைக்கில் வெர்ல்டு ரூர் சென்று வருகிறார். மேலும் அஜித் பைக் பிசினஸ் ஒன்றையும் துவங்கியுள்ளார். 
 
இந்நிலையில் ஷாலினி அஜித்திற்கு மிகவும் பிடித்த பாடல் இது தான் என கூறி அவருடன் காரில் பயணிக்கும் போது எடுத்து வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் வெளியிட்டுள்ளார். 1994ல் தமிழில் வெளிவந்த " பவித்ரா" படத்தில் இடம்பெற்ற " உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே" என்ற பாடல் தான் அது. அஜித் ஹீரோவாக நடித்த அந்த படத்தில் அவரது தாயாக ராதிகாவும் தந்தையாக நாசரும் நடித்திருப்பார்கள்.

https://www.instagram.com/stories/shaliniajithkumar2022/3135094966846565843/?hl=en