1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : புதன், 28 ஜூன் 2023 (13:04 IST)

ஸ்லிம் லுக்... செம ஸ்மார்ட்... அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்ட ஷாலினி - தெறிக்கும் லைக்ஸ்!

அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
 
தொடர்ந்து நடித்து வரும் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். தற்ப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார். இதனிடையே பைக்கில் வெர்ல்டு ரூர் சென்று வருகிறார். மேலும் அஜித் பைக் பிசினஸ் ஒன்றையும் துவங்கியுள்ளார். 
 
இந்நிலையில் ஷாலினி அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதில் ஸ்லிம் பிட் தோற்றத்தில் செம ஸ்மார்ட்டாக தல இருப்பதை அவரது ரசிகர்கள் அதிக சந்தோஷத்தில் லைக்ஸ் குவித்து போட்டோ ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.