1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : சனி, 24 ஜூன் 2023 (14:58 IST)

என்கிட்ட அது அழகா இல்லனு நிராகரித்தார்கள் - வேதனையை பகிர்ந்த சோபிதா துலிபாலா!

ஆந்திராவை சேர்ந்தவரான நடிகை சோபிதா துலிபாலா ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து மாடல் அழகியாக அனைவரையும் கவர்ந்தழுத்தார். இவர்  இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 
 
அனுராக் காஷ்யப்பின் ராமன் ராகவ் 2.0 என்ற அதிரடித் திரைப்படத்தில் துலிபாலா அறிமுகமானார். மேலும் தெலுங்கில் குட்டாச்சாரி மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் நாடகத் தொடரான மேட் இன் ஹெவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து கோலிவுட் சினிமா ரசிகர்களுக்கும் பேமஸ் ஆன நடிகையாக பார்க்கப்பட்டார். 
 
இந்நிலையில் தான் கடந்து வந்த பாதை குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசிய சோபிதா துலிபாலா, படங்களில் நடிக்க வருவதற்கு முன் நான் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு தேடினேன். அப்போது நான் வெள்ளையாக இல்லை, வசீகரிக்கும் அளவுக்கு நான் அழகாக இல்லை என்று எனக்கு முன்பே கூறினார்கள், அதற்காக நான் சோர்வடையவில்லை. எனது முழு திறமையை சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் காட்டி வந்தேன். அது தான் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது என கூறியுள்ளார்.