ஐட்டம் பாடலுக்கு நடனமாடிய நடிகைக்கு நேர்ந்த கொடுமை!

Last Updated: செவ்வாய், 2 ஜூலை 2019 (15:49 IST)
ஐட்டம் நடனத்திற்கு பரிட்சியமானார் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் . இவர் சிம்பு நடித்த ஒஸ்தி படம் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.

 
கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் படத்தில் ஜாஸ்மீன் கதாபாத்திரத்தில் நடித்தவர் மல்லிகா ஷெராவத். அதனையடுத்து ஒஸ்தி படத்தில் இடம் பெற்ற கலாசலா என்ற பாடல், மிகவும் பிரபலமானது. இந்த பாடலுக்கு மிகவும் கவர்ச்சியாக ஆடி  இருப்பார் மல்லிகா ஷெராவத். இந்த ஒரே ஒரு பாடலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அடையாளம் காண செய்துவிட்டார். 
 
அதன்பிறகு இவருக்கு படவாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. இதனால் இவர் சினிமாவை விட்டு விலகிவிட்டதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது இதுகுறித்து பேசியுள்ள  மல்லிகா ஷெராவத்எனக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இருக்கிறது. ஆனால் வேண்டும் என்றே ஓரம் கட்டுகிறார்கள். 
 
ஐட்டம் பாடலுக்கு நடனமாட வாய்ப்பு தருவதற்கும் யோசிக்கிறார்கள். காரணம், பெண் உரிமைகள் பற்றி பேசுவதால் நம்மிடம் இப்படி தான் பேசுவாள் என வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் படத்தில் நடிக்கும் ஹீரோக்களே  தங்கள் தோழிகளை நடிக்கவைக்கின்றனர் பிறகு எங்களை போன்றவர்களுக்கு எப்படி வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறி புலம்பியுள்ளார்  மல்லிகா ஷெராவத்.


இதில் மேலும் படிக்கவும் :