புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 14 ஜனவரி 2022 (19:04 IST)

8 படங்கள் ரிலீஸ் ஆகியும் வெறிச்சோடிய திரையரங்குகள்: பல காட்சிகள் ரத்து!

பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று 4 படமும் இன்று 4 படமும் ரிலீஸ் ஆன நிலையில் மொத்தம் எட்டு படங்கள் ரிலீஸ் ஆகியும் திரையரங்குகளில் பார்வையாளர்கள் இல்லாமல் இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
 
சதீஷ் நடித்த நாய் சேகர், அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய், சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம், விதார்த் நடித்த கார்பன் உள்பட 8 திரைப் படங்கள் நேற்றும் இன்றும் ரிலீஸ் ஆகின 
ஆனால் எந்தத் திரைப்படத்திற்கும் போதிய ரசிகர்கள் இல்லை என்பதும் பல திரையரங்குகள் காத்தாடின என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஒருசில திரையரங்குகளில் பத்துக்கும் குறைவான பார்வையாளர்களை வந்ததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது
 
வலிமை, ‘ஆர்.ஆர்.ஆர்., ராதே ஷ்யாம் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டதை அடுத்து எட்டு படங்கள் ரிலீசாகி திரையரங்குகளில் கூட்டம் இல்லாமல் இருந்தது திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது