செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (12:16 IST)

ராய்லட்சுமியுடன் குத்தாட்டம் போட்ட லெஜண்ட்: சிங்கிள் பாடல் ரிலீஸ்

vadivasal song
ராய்லட்சுமியுடன் குத்தாட்டம் போட்ட லெஜண்ட்: சிங்கிள் பாடல் ரிலீஸ்
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் நடித்த ’தி லெஜண்ட்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற வாடி வாசல் என்ற பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது 
 
இந்த பாடலில் சரவணன் மற்றும் ராய் லட்சுமி ஆகிய இருவரும் திருவிழா நடக்கும் இடத்தில் குத்தாட்டம் ஆடுவது போன்ற காட்சிகள் உள்ளன 
 
மிகவும் கலர்ஃபுல்லாக ஏராளமான பொருட்செலவில் திருவிழாக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 
 
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த பாடலை ஜொனிதா காந்தி மற்றும் பென்னி தியோல் பாடி உள்ளனர் என்பதும் சினேகன் இந்த பாடலை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது