வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By ஜெ.துரை
Last Modified: புதன், 22 நவம்பர் 2023 (10:37 IST)

'தி வில்லேஜ்' - வெப் சிரீஸ் அனுபவத்தை பகிர்ந்த ஆர்யா!

'தி வில்லேஜ்' இணையத் தொடர் மூலம் என்னுடைய ஒடிடி டிஜிட்டல் தள அறிமுகம், நிச்சயமாக வித்தியாசமான அனுபவமாகும் என  நடிகர் ஆர்யா பேட்டி.


பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் ஒரிஜினல் தமிழ் திகில் தொடரான 'தி வில்லேஜ்' எனும் நீண்ட வடிவிலான இணையத் தொடரின் உலகளாவிய பிரீமியரை அண்மையில் அறிவித்தது. இந்தத் தொடர் அதே பெயரில் அஸ்வின் ஸ்ரீவத்சங்கம்,  விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ் குப்தா ஆகியோர் உருவாக்கிய கிராஃபிக் ஹாரர் நாவல்களால் ஈர்க்கப்பட்டு உருவாகியிருக்கிறது.

தனது குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு பின்னணியில் உள்ள மர்மத்தை அவிழ்க்க முயற்சிக்கும் மனிதனின் கதையை இந்த திகில் தொடர் விவரிக்கிறது. திறமைமிகு நடிகர்களில் ஒருவரான ஆர்யா- பத்தாண்டுகளுக்கும் மேலாக திரை துறையில் பணியாற்றி வருகிறார்.

இப்போது இந்த திகில் தொடரில் நடித்ததன் மூலம் நீண்ட வடிவத்திலான இணையத் தொடரின் ஸ்ட்ரீமிங்கில் அறிமுகமாகிறார். இந்த திகில் தொடரில் அவர் கௌதம் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரம், கட்டியல் எனும் கிராமத்தில் வசிக்கும் உள்ளூர் வாசிகள் சிலருடன் இணைந்து தனது குடும்பத்தை கண்டறியும் மீட்பு பணியில் ஈடுபடுவராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒரிஜினல் திகில் தொடர் பற்றி நடிகர் ஆர்யா பேசுகையில், '' தி வில்லேஜ் எனும் திகில் தொடருடனான எனது ஒ டி டி எனும் டிஜிட்டல் தள அறிமுகம் நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. இதன் கருத்தாக்கம், திகில் &  த்ரில்லர் அம்சம் மற்றும் ஆழமான கதை ஆகியவை இந்திய ஒ டி டி சந்தையில் ஒரு போதும் அதன் ரசிகர்களால் அனுபவிக்கப்படவில்லை. மேலும் இந்த இணைய தொடர் சுவராசியமானதாக இருப்பதையும் நான் கண்டேன்.

இது என்னை தொடர்ந்து பணியாற்ற வழி வகுத்தது.‌ இந்திய ஒடிடி இயங்கு தளங்களில் காணப்படும் அனைத்து திகில் வகையிலிருந்தும் 'தி வில்லேஜ்' எனும் இந்த திகில் தொடர் தனித்துவமானதாகும். பல தருணங்களில் திரைப்படங்களில் நாம் பார்க்கும் திகில். ஓர் எல்லைக்குள் பின் தடை செய்யப்பட்டதாக இருக்கும். அதை உருவாக்கும் போது ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் செல்ல இயலாத நிலை உண்டு.

ஆனால் இந்த திகில் தொடரில் இயக்குநர் மிலிந்த் ராவ் அனைத்து அம்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஜானரிலான உள்ளடக்கத்தை உருவாக்குவதில் படைப்பாளிகள் நம்புவதற்கு இது ஒரு சிறந்த வழி என நான் நினைக்கிறேன். ஏனெனில் மக்கள் இந்த வகையான ஜானரிலான படைப்புகளை கண்டு ரசிக்க விரும்புகிறார்கள்.‌'' என்றார்.

'தி வில்லேஜ்' எனும் இந்த திகில் தொடரில் ஆர்யாவுடன் திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பி என் சன்னி, கே. முத்துக்குமார், எஸ். எஸ். கலைராணி, ஜான் கொக்கன், பூஜா, வி. ஜெயப்பிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், 'தலைவாசல்' விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.‌ இந்த தொடர் வினோதமான தோற்றமுடைய உயிரினங்கள்... மரபு பிறழ்ந்தவர்கள்.. ஒரு குடும்பத்தை இடைவிடாமல் வேட்டையாடும் பயங்கர கொடூரத்தின் முடிவில்லாத இரவைக் காட்சிப்படுத்தி இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் சகிப்புத்தன்மையின் விளிம்பிற்கு அழைத்துச் செல்கிறது.

இந்த ஒரிஜினல் தமிழ் திகில் தொடரை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கி இருக்கிறார். ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி. எஸ். ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இந்த ஒரிஜினல் திகில் தொடர் நவம்பர் 24ஆம் தேதி முதல் தமிழில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. அதனுடன் தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலத்தில் சப்- டைட்டில்களுடன் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
 
Edited By: Sugapriya Prakash