1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2017 (16:31 IST)

நயன்தாராவின் சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியான சங்மித்ரா படக்குழு!

சுந்தர்.சி இயக்கத்தில் 400 கோடி ரூபாய் செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் படம் சங்கமித்ரா. பிரமாண்டமாக உருவாக இருக்கும் சங்கமித்ரா, படக்குழு பட அறிவிப்பையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கான்ஸ் பட விழாவில் தொடங்கி வைத்து அமர்க்களப்படுத்தியது.

 
இப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமான நடிகை ஸ்ருதிஹாசன் சில நாட்களிலேயே நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் யார் நாயகி என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்த நிலையில், தொடர்ந்து நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா  உள்ளிட்ட பல நடிகைகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகள் கொண்ட ப்ராஜெக்ட் என்பதால்  அவர்கள் ஒப்புக்கொள்ள மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
 
நயன்தாரா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதிய சங்மித்ரா படக்குழு, கால்ஷீட் பற்றி பேசினர். பல ஆண்டுகள் கொண்ட ப்ராஜெக்ட் என்பதால் ஒரு பெரும் தொகையை கேட்டராம் நயன்தாரா. அதை கேட்டு அதிர்ச்சியான படக்குழு அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை தொடங்காமல் திரும்புயுள்ளது.  
 
இந்நிலையில் ஹன்சிகாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.