செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 13 நவம்பர் 2017 (16:02 IST)

நயன்தாராவின் பெயருக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம்

கடந்த வாரம் அறம், இப்படை வெல்லும், நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்கள் வெளியானது. தற்போது இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதில் நயன்தாராவின் அறம் படம் சென்னையில் மட்டும் ரூ. 1  கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

 
நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக  ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தினை ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த திரையுலகமே பாராட்டி வருகிறது.
 
இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார், இதில் இவர் பெயர் மதிவதனி. இந்த பெயரை இதற்கு முன் பலரும் அறிந்திருப்பீர்கள். தெரியாதா? அப்படியென்றால் இதோ, LTTEயின் தலைவர் பிரபாகரனின் மனைவியின் பெயரும் மதிவதனி தான். அவரை போல் ஒரு தைரியமான பெண்ணின் பெயரை மக்களுக்கு தெரியப்படுத்தவே இயக்குனர் இந்த பெயரை தேர்வு செய்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.