1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 4 ஆகஸ்ட் 2021 (19:34 IST)

''பொன்னியின் செல்வன் ''பட அடுத்த லுக்...இணையதளத்தில் வைரல்

பிரபல நாளிதழ் ஒன்று மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாப்பாத்திர உருவத்தோற்றத்தைக் கற்பனை  ஓவியமாகத் தீட்டியுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

இந்நிலையில் இந்த படத்தை முக்கியமான அப்டேட்டாக கதாபாத்திர அறிமுகம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் அப்டேட் ஆகியவையும் வெளியாகியுள்ளன.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில்  விக்ரம், ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், கிஷோர், கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்துவரும் திரைப்பம் பொன்னியில் செல்வன். அமரர் கல்கியின் நாவலைத் தழுவி எடுக்கப்படும் இப்படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடி.

இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டும் வரும் இப்படத்திப் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் ரிலீசானது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அடுத்து பிரபல நாளிதழ் ஒன்று கற்பனையாக இப்படத்தின் நடிக்கும் நடிகர்களின் தோற்றத்தை ஓவியமாகத் தீட்டியுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.