செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (18:05 IST)

நீங்க வேற வெலல் மாப்பிள்ளை ….ஆர்யாவை பாராட்டிய மாமியார் !

நடிகர் ஆர்யா நடித்து சமீபத்தில் திரைக்கு வரவுள்ள படம் சர்பட்டா. இப்படத்தில் ஆர்யா சிறப்பாக நடித்துள்ளதாக அவர்து மாமியார் பாராட்டியுள்ளார்.

கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித் அடுத்ததாக இயக்கி வரும் படம் சார்பட்டா. இந்த படத்தில் நாயகனாக ஆர்யா நடித்துள்ளார். இந்த படம் குத்துச்சண்டையை மையப்படுத்திய படம் என்பதால் இதற்காக ஆர்யா பிரத்யேகமாக உடற்பயிற்சி மேற்கொண்ட வீடியோக்கள் முன்னதாக வெளியாகி ட்ரெண்டாகி இருந்தன.

இந்நிலையில் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள் பற்றிய முன்னோட்ட வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆர்யா கபிலன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியான துஷாரா விஜயன் மாரியம்மாள் என்ற கதாப்பாத்திரத்திலும் நடிக்கின்றனர். இதுதவிர பசுபதி – ரங்கன் வாத்தியார், ஜான் கொக்கன் – வேம்புலி, கலையரசன் – வெற்றி செல்வன், சந்தோஷ் – ராமன், காளி வெங்கட் – கோனி உள்ளிட்ட பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது.

இப்படத்தின் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ஆர்யாவின் மாமியாரும் சாயிஷாவின் அம்மாவுமான சாஹீன் பானு  மருமகனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.அதில்.அர்ப்பணிப்பு விடாமுயற்சி, புத்திசாலித்தனம் இவைதான் நீங்கள்….நீங்கள் எங்களைப் பெருமைப்பட வைத்துள்ளதுடன் வேற லெவலுக்குச் சென்றுள்ளீர்கள் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி மாமி என ஆர்யா தெரிவித்துள்ளார்.