திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 7 மார்ச் 2021 (15:41 IST)

விக்ரம்முடன் நேருக்கு நேர் மோதும் சிம்பு… ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷல்!

இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படமும் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படமும் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களில் எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்த படம் தற்போது முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. முன்னதாக இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை உருவாகி கவனத்தை ஈர்த்திருந்தன. இந்த படத்தின் பெருவாரியான படப்பிடிப்பு முடிந்துள்ளது. இன்னும் 10 நாட்களே படப்பிடிப்பு நடக்க உள்ள நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகள் தொடங்கியுள்ளன.

அதே போல மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகும் விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படமும் ரம்ஜான் பண்டிகைக்குதான் வெளியாகும் என சொல்லப்படுகிறது.