வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 22 மார்ச் 2017 (18:17 IST)

நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி கொண்ட மோகன்லால்!

மலையாள நடிகர் மோகன்லால் பி. உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் ‘வில்லன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடந்து வருகிறது. இப்படத்தில் விஷால் வில்லனாக நடிக்கிறார். இப்படம் மூலம் ஹன்சிகா மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார்.


 
 
வில்லன் படத்திற்காக திருவனந்தபுரம் வந்த மோகன்லால் தனது நண்பரின் உதவியுடன் மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில்  அதிகாலை 4.30 மணிக்கு தெருக்களில் சைக்கிளில் சென்றுள்ளார். திருவனந்தபுரம் தெருக்களில் சைக்கிள் ஓட்டிச் செல்ல வேண்டும் என்பது மோகன்லாலின் நீண்ட நாள் ஆசை. அந்த ஆசையை அவர் தற்போது நிறைவேற்றிக் கொண்டுள்ளார்.
 
தற்போது திருவனந்தபுரம் தெருக்களில் சைக்கிள் ஓட்டிய மோகன்லால் இளமை பருவத்தில் தனது நண்பர்களுடன் இந்தியன்  காபி ஹவுஸுக்கு சென்று காபி குடித்து மகிழ்ந்துள்ளார்.