கோட் படத்தில் டி ஏஜிங் பணிகளில் தாமதம்… ரிலீஸ் பாதிப்பா?
விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த மூன்று வேடங்களுக்கும் மூன்று கெட்டப்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதில் ஒரு விஜய்யின் தோற்றம் மிகவும் இளமையாக இருக்கவேண்டும் என்பதற்காக அமெரிக்காவில் உள்ள நிறுவனத்திடம் டி ஏஜிங் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
விஜய்க்கு மட்டும் இல்லாமல் பிரபுதேவா மற்றும் பிரசாந்த் ஆகியோருக்கும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இளமையான தோற்றத்தைக் கொண்டுவர உள்ளதாக சொல்லப்படும் நிலையில் இந்த பணிகள் நிறைவடைய குறிப்பிட்ட தேதியை விட சில் வாரங்கள் அதிகமாகும் என சொல்லப்படுகிறது. இதனால் கோட் திரைப்படம் அறிவித்த தேதியில் ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.