திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 நவம்பர் 2023 (18:07 IST)

துருவ நட்சத்திரம் படம் பார்த்து விமர்சனம் செய்த 2 பிரபலங்கள்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த இரண்டு பிரபலங்கள் தங்களது சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்துள்ளனர். 
 
ஒருவர் பிரபல இயக்குனர் லிங்குசாமி. அவர் இந்த திரைப்படத்தை மும்பையில் பார்த்ததாகவும் படம் சூப்பராக வந்துள்ளதாகவும் விக்ரம் மற்றும் விநாயகன் நடிப்பு அபாரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் 
 
கெளதம் மேனன் இயக்கம், ஹாரிஸ் ஜெயராஜ் இசை இந்த படத்திற்கு மிகவும் பலமாக இருப்பதாகவும் இந்த படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாகும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது சமூக வலைதளத்தில் துருவ நட்சத்திரம் படம் பார்த்து தான் அசந்து விட்டதாகவும் நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.  
 
நீண்ட காலமாக தயாராகி வந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran