வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (14:46 IST)

விஜய் குரலில் ''வாரிசு'' பட முதல் சிங்கில்?

Vijay
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த  நிலையில், வாரிசு படத்தின் முதல் சிங்கில் இந்த வாரம் வெளியாகும் என  இசையமைப்பாளர் தமன் பிரின்ஸ் பட விழாவில் கூறியிருந்தார்

இந்த படத்தின் ஐரோப்பா முழுமைக்குமான ரிலீஸ் உரிமத்தை சீசன்ஸ் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் கைப்பற்றியுள்ளது.  இதை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிர்யேஷன்ஸ் அறிவித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் ஆடியோ உரிமையை பாலிவுட்டின் பிரபல ஆடியோ வெளியீட்டு நிறுவனமான டி சீரிஸ் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், வாரிசு படத்தின் தமன் இசையில்  நடிகர் விஜய் பாடியுள்ள ரஞ்சிதமே என்ற பாடல் படம் பற்றிய அறிவிப்பு இன்று மாலை  மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகிறது.
 
Edited by Sinoj