வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2015 (10:59 IST)

சென்னையில் முதல் ஐமேக்ஸ் திரையரங்கு

சென்னையில் முதல் ஐமேக்ஸ் (IMAX - IMAGE MAXIMUM) திரையரங்கு வரும் 20 -ஆம் தேதி முதல் செயல்பட தொடங்குகிறது.


 
 
வழக்கமான திரையை விட பல மடங்கு பெரிய திரையில் துல்லியமான ஒலி, ஒளியில் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை பிரமாண்டமாக்குவதுதான், ஐமேக்ஸ். திரை அனுபவத்தின் இன்னொரு மைல்கல்.
 
டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் ஐமேக்ஸ் திரையரங்குகள் உள்ளன. சென்னையில் ஐமேக்ஸ் திரையரங்கு இல்லாதது ஒரு குறையாக இருந்தது. அது இப்போது தீர்ந்தது.
 
சசிகலாவும், அவரது உறவினர் இளவரசியும் வாங்கியுள்ள பீனிக்ஸ் மாலின் லக்ஸ் திரையரங்கில் புதிதாக ஐமேக்ஸ் திரையரங்கு செயல்பட உள்ளது. முதல் படமாக ஜேம்ஸ் பாண்டின் ஸ்பெக்டர் திரைப்படத்தை திரையிடுகின்றனர். வரும் 20 -ஆம் தேதி முதல் ஐமேக்ஸ் அனுபவத்தை சென்னைவாசிகள் பெறலாம். டிக்கெட் கட்டணம் கொஞ்சம் அதிகம். 360 ரூபாய்கள்.