செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (13:36 IST)

''படம் பிளாக்பஸ்டர்....எனக்கு புல்லரிக்குது...ரஜினியுடன் ஹாட்ரிக்''- ஜெயிலர் படம் பற்றி நடிகை ரம்யா கிருஷ்ணன்

jailer -ramya kirshnan
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில்,  நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். இப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது.

ரஜினியுடன் இணைந்து  மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன்  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்  நடிப்பில், அனிருத் இசையில்,  சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்று வெளியான இப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த  நிலையில், ஜெயிலர் படம் காலை 9 மணிக்குத்தான் முதல் ஷோ ஆரம்பமானது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் என்ன ரெஸ்பான்ஸ் உள்ளது? படம் எப்படி உள்ளது? என இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள ரம்யா கிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுபற்றி ரம்யா கிருஷ்ணன்,  ''படம் பிளாக்பஸ்டர்…எனக்குப் புல்லரிச்சிட்டிருக்கு….படம் சூப்பர்''… என்றார்.

படையப்பா படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் நடித்துள்ளீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, ''ஹாட்ரிக் என்று அவர் கூறினார். 100 சதவீதம் ஹாட்ரிக்….ஃபர்ஸ்ட் டைம் ஃபைர்ட் ஷோ இதுவே எனக்கு முதல்முறை… நன்றாக என்ஜாய் செய்தேன்…தலைவர் தலைவர் தான்… இப்படம் பான் இந்தியாவுக்கு மேல போகும்'' என்று கூறினார்.

மேலும், படையப்பா படத்தில் நீலாம்பரியாக ரஜினியுடன் சேரவில்லை….ஆனால், இப்படத்தில் அவரது மனைவி விஜியாக நடித்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு,. ''ஜெயிலர் பார்ட் 2 வந்தால், இன்னும் வேற பண்ணலாம்'' என்று கூறியுள்ளார்.

ரம்யா கிருஷ்ணன், ரஜினியுடன் படையப்பா, பாபா படத்திற்குப் பிறகு ஜெயிலர் படத்தில்  3வது முறையாக இணைந்து நடித்துள்ளார்.