புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 11 ஜூலை 2019 (18:22 IST)

"பிக்பாஸ் வீட்டில் காதல் இல்லை செ*ஸ் தான்" கமலை கழுவி ஊற்றிய முன்னாள் போட்டியாளர்!

பாலிவுட்டில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. போட்டியாளர்களின் ஆபாச வார்த்தைகள், பெண்கள் அணியும் கவர்ச்சியான உடைகள் என பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. 


 
ஆனாலும் அதையெல்லாம் மீறி முதல் சீசன், இரண்டாவது சீசன், என தொடங்கி தற்போது மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்து அமோகமாக போய்க்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி ஆரம்பிக்க பட்ட நாளிலிருந்தே முன்னாள் போட்டியொயாளர்களை தேடி தேடி பல இணையதள சேனல்கள் பேட்டியெடுத்து வருகின்றனர். அந்தவகையில்  கடந்த பிக் பாஸ் சீசனில் பங்குபெற்ற மமதி சாரி பிரபல யுடியூப் சேனல் ஒன்றிற்கு  பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு விஷங்களை பகிர்ந்துள்ளார். 
 
அப்போது பிக்பாஸில் நடக்கும் காதல் குறித்து பேசிய அவர் " அதெல்லாம் லவ் இல்லை அது செக்ஸ். போன சீசனில் நடந்த அனைத்தையும் முழுதாக காண்பித்திருந்தால் நீங்கள் எல்லாரும் வீட்டில் லேப் டாப்பில் நிகழ்ச்சியை பார்த்திருப்பீர்கள். மேலும் கவின் நான்கு பெண்களுடனும் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார். 4 பெண்ணையும் காதலிக்கிறேன் என்கிறார். இதையெல்லாம் மக்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதையே ஒரு பெண் செய்திருந்தால் அதற்கு அர்த்தம் வேறு. 


 
பின்னர் கமல் குறித்து பேசிய அவர்,  நம்மில் யாரேனும் தமிழில் பேசினால் அவருக்கு நக்கலாக தான் இருக்கும். ஆனால் அவரே தமிழில் வார்த்தைகளை தேடி தேடி பிடித்து தான் பிக்பாஸில் வந்து பேசுகிறார்.  இதில் அவர் நான் தமிழில் பேசும் போது நக்கல் செய்தார். நான் தமிழில் பேசியதை  போது அதனை இளக்காரமாக பார்த்தார் என்று பல சர்ச்சையான கேள்விகளுக்கு தயங்காமல் பதிலளித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.