1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 11 ஜூன் 2022 (20:11 IST)

பிரபல நடிகைக்குப் பெண் குழந்தை பிறந்தது..

pranetha
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பிரணிதா. இவர் சூர்யாவுடன் மாஸ், கார்த்தியுடன் சகுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு இவர் பிரஜித் என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார். இதையடுத்து இவர் தன் வளைகாப்பு புகைப்படங்களை சமூகவலைதளங்களில் ரசிகர்களுக்காக பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.  இதுகுறித்து அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், என் பிரசவ வலியைக் குறைக்க முயற்சித்த டாக்டர்களுக்கு , மருத்துவ நிபுணர்களுக்கு என் நன்றி எனவும், என் குழந்தையின் முகத்தை விரைவில் உங்களிடம் காட்டுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pranitha Subhash