சீரியலில் நடிக்கும் பிரபல நடிகை....ரசிகர்கள் ஆச்சர்யம்
தமிழ் சினிமாவில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த நடிகை சோனா சின்னத் திரையில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் கவர்ச்சி வேடங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை சோனா. சில ஆண்டுகளுக்கு முன் சில நடிகர்கள் மீது புகார் கூறி இவர் பரபரப்பு ஏற்படுத்தினார்.
இந்நிலையில் நீண்ட நாட்களாகச் சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்த நடிகை சோனா தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள அபி டெய்லர் சீரியலில் நடிக்கவுள்ளார். இந்த சீரியல் ஹிட் அடித்தால் அவர் மீண்டும் சினிமாவில் நடிப்பார் என்க் கூறப்படுகிறது.