செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (18:49 IST)

சைக்கோ வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்…ரசிகர்கள் ஆச்சர்யம்

நடிகர் பிரபுதேவா பாகீரா என்ற படத்தில் இதுவரை நடிக்காத சைக்கோ கொலைகாரன் வேடத்தில் நடித்துள்ளர்.

இந்தியாவின் மைக்கெல் ஜாக்சன் என்று அழைக்கபடுவர் பிரபுதேவா. இவர் இந்தியாவில் முக்கியமா இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார்.

த்ரிஷா இல்லைனா நயன்தாரா, சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்க்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் அடுத்து பாகீரா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் நடிகர் பிரபுதேவா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் நடித்திருக்கிறார். அனேகன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்த நடிகை அம்ரியா தஸ்தூர் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.  இப்படத்தின் வேலைகள் விரைவாக நடந்து வருகிறது.

இப்படத்தின் டீசர் வரும் 19 ஆம் தேதி ரிலீஸாகும் எனக் கூறப்பட்ட நிலையில், இன்று  இப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டு இப்படத்தை #BagheeraTeaser புரமோஷன் செய்துள்ளார். இப்படத்தில் பிரபுதேவா இதுவரை நடிக்காத சைக்கோ கொலைகாரன் வேடத்தில் நடித்துள்ளர். ரசிகர்கள் பிரபுதேவாவின் நடிப்பை பாராட்டிவருகின்றனர்.