வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (14:23 IST)

படுக்கையில் மட்டுமில்ல... சமந்தாவின் அனல் பறக்கும் சண்டை காட்சி - மேக்கிங் வீடியோ!

சமந்தா நடிப்பில் உருவாகியுள தி ஃபேமிலிமேன்- 2 பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் கடந்த 4ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸானது. இதில் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
’தி ஃபேமிலிமேன் 2’ தொடர் ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களின் உணர்வுகளை பெருமளவு புண்படுத்தி உள்ளது அதனால் இதைத் தடைசெய்ய வேண்டுமென சீமான் வைகோ உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தினர். இத்தொடரில் பிரதான கேரக்டரில் நடித்துள்ள சமந்தாவுக்கு எதிர்ப்புகள் குவிந்தது.
 
ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களின் உணர்வுகளை இந்த தொடர் பெருமளவு புண்படுத்தி உள்ளது என்று தமிழக அரசு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரருக்கு கடிதம் எழுதியது. ஈழத் தமிழர்களைத் தவறாக சித்தரித்துள்ளதாக பெரும் எதிர்ப்புகள் உருவான நிலையில் இந்த தொடர் வெளியாகிய பிறகு நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. 
 
இதில் சமந்தாவின் நடிப்பை ரசிகர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டித்தள்ளியுள்ளனர். இந்நிலையில் தற்போது ’தி ஃபேமிலிமேன் 2’ தொடரின் சண்டை காட்சியில் சமந்தா பின்னி பெடலெடுத்துள்ளார். படத்தின் மேக்கிங் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி Goosebumps வரவைத்துவிட்டது. இதோ அந்த வீடியோ...   இதற்கு முன்னர் படுக்கை காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.