திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2022 (17:50 IST)

ஒரு படத்திற்காக ஒட்டுமொத்த படக்குழுவினர் விரதம்!

sai baba makimai
தமிழ் சினிமாவில் சாமி படங்களுக்கு என்றும்  நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், சாய்பாபா பற்றி உருவாகிவரும் படத்திற்காக படக்குழுவினர் விரதம் இருந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

 நடிகர் ரவிக்குமார் நடிப்பில், பிரியா பாலு கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து வரும் படம் சீரடி சாய்பாபா மகிமை.

இப்படத்திற்கு  ஹரிகாந்த் ஒளிப்பதிவு செய்கிறார். அபிஜோஜா இசையமைக்கிறார்.

சாய்ப்பாபாவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளின் அடிப்படையில் உருவாகி வரும் இப்படத்திற்காக படக்குழுவினர் ஒரு வாரம் விரதம் இருந்து, சீரடி சாய்பாபாவை வணங்கிவிட்டு இப்பட வேலைகளில் இறங்கியுள்ளனர்.

இது ரசிகர்களிடமும், பக்தர்களிடமும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.