செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2021 (18:00 IST)

இலங்கைக் கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலைக் கண்டிக்கிறேன்: கமல்ஹாசன் டுவீட்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்பட்டு வருவது குறித்த சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டனர் என்பதும் அதில் 4 மீனவர்கள் பரிதாபமாக பலியாகினர் என்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் இலங்கை கடற்படையை கண்டித்து அதிமுக திமுக உள்பட அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன என்பதும் பலியான மீனவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் நிதியுதவி குறித்த அறிவிப்பை வெளியிட்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எமது மீனவர்கள் உயிரிழக்கக் காரணமான இலங்கைக் கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலைக் கண்டிக்கிறேன். பாரம்பரிய கடல் பகுதியில் எமது மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடித் தொழில் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு செய்யவேண்டும்