1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: புதன், 10 ஜனவரி 2018 (14:58 IST)

ஜனவரி 26ஆம் தேதியைக் குறிவைக்கும் படங்கள்

பொங்கலுக்கு தியேட்டர்கள் கிடைக்காததால், ஜனவரி 26ஆம் தேதியை சில படங்கள் குறிவைத்துள்ளன.
பொங்கல் விடுமுறையில் ரிலீஸ் செய்ய போதுமான தியேட்டர்கள் கிடைக்காததால், சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’,  விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’ ஆகிய மூன்று படங்கள் மட்டுமே ரிலீஸாகின்றன. எனவே, அடுத்ததாக மூன்று நாட்கள் விடுமுறை வரும் 26ஆம் தேதியை சில படங்கள் குறிவைத்துள்ளன.
 
ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’, விஷாலின் ‘இரும்புத்திரை’, உதயநிதி ஸ்டாலினின் ‘நிமிர்’, அனுஷ்காவின் ‘பாகமதி’  என 4 படங்கள் 26ஆம் தேதி லிஸ்ட்டில் இருக்கின்றன. இதுதவிர, பாலிவுட்டில் அக்‌ஷய் குமாரின் ‘பேட் மேன்’ மற்றும்  தீபிகா படுகோனேவின் ‘பத்மாவதி’ ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இந்த இரண்டு படங்களுமே தமிழிலும் ரிலீஸாகும்.
 
இந்நிலையில், பொங்கலுக்கு ரிலீஸாக முடியாத விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ மற்றும்  சுந்தர்.சி.யின் ‘கலகலப்பு 2’ ஆகிய இரண்டு படங்களும் 26ஆம் தேதியைக் குறிவைத்துள்ளன. எனவே, 26ஆம் தேதி ரிலீஸ் படங்களின் பட்டியலில் மாற்றம் ஏற்படலாம் எனத் தெரிகிறது.