வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (13:39 IST)

ஆஸ்கார் விருதுக்கு செல்லும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்? அதிர்ச்சி தகவல்

chellor show
ஆஸ்கார் விருதுக்கு செல்லும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்? அதிர்ச்சி தகவல்
இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெற்றுள்ள இந்திய திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் திடீரென மரணமடைந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் சார்பில் ’ஷெல்லோ ஷோ’ என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் 15 வயது சிறுவன் ராகுல் என்பவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில் அவர் இன்று காலமானார் 
 
கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு ஒரு வகையான புற்றுநோய் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை எடுத்து கொண்டு போராடி வந்த அந்த சிறுவன் இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதுகுறித்து அச்சிறுவனின் தந்தை கூறிய போதும் ராகுலின் இறுதிச்சடங்கிற்கு முன்னர் நாங்கள் குடும்பத்தோடு அவர் நடித்த திரைப்படத்தை பார்க்க இருக்கிறோம் என்று கூறியுள்ளார். இந்த படம் அக்டோபர் 14-ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆஸ்கார் விருதுக்கு செல்லும் திரைப்படத்தில் நடித்த சிறுவன் ராகுல் காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 

Edited by Siva