செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 22 மே 2021 (18:43 IST)

பிரபல பாடகிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது....

பின்னணி பாடகிக்கு குழந்தை பிறந்துள்ளது. திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான், இம்ரான் ஹாஸ்மி, ஷங்கர் மகாதேவன், தேவி ஸ்ரீபிரசாத் ஹாரிஸ் ஜெயராஜ், டி,இமான் உள்ளிட்ட இசையமைப்பாளரின் இசையில் அதிகப் பாடல் பாடியவர் ஸ்ரேயா கோஷல்.

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் சமீபத்தில் அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவித்தார்.

இதையடுத்து, அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த அவரது பெற்றோர்கள் முடிவு செய்த நிலையில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு காரணமாக சுபநிகழ்ச்சிகளுக்கு 100 பேர்கள் மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு காரணமாக ஆன்லைனிலேயே அவருக்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதனை அடுத்து வளைகாப்பு நிகழ்ச்சியில் மிக குறைந்த உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர் என்பதும் மற்ற நண்பர்கள் மற்றும் தோழிகள் ஆன்லைனிலேயே ஷ்ரேயா கோஷலுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் ஸ்ரேயா கோஷலுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரேயா கோஷல், இதுபோன்ற மகிழ்ச்சியை நான் சந்தித்தது இல்லை; கடவுள் எங்களுக்குக் கொடுத்த ஆசிர்வாதம் எனத் தெரிவித்துள்ளார்.